Apple: தூங்கும்போது அருகிலேயே சார்ஜ் செய்வது சரியா? Apple வெளியிட்ட முக்கியமான வழிகாட்டி நெறிமுறைகள்
ஜான்சி ராணி August 27, 2024 05:38 PM

தூங்கும்போது ஸ்மார்ட்ஃபோன் சார்ஜிங்கில் இருக்கும்போது அருகில் வைத்திருப்பது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று Apple நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு என்பது அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பாக  பல்வேறு எச்சரிக்கைகள், அறிவுரைகள், என்ன செய்யலாம்? எதெல்லாம் ஆபத்தானது என்பது பற்றிய தகவல்கள் நம்க்கு நிறைய கிடைக்கும். இந்நிலையில் Apple நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஆரோக்கிய வழிமுறை குறித்து அறிவுரை வழங்கியுள்ளது.

தூங்கும்போது அருகில் ஸ்மாட்ஃபோன் வைத்திருப்பது உடல்நலத்திற்கு தீங்குவிளைவிக்க கூடியது என்று பல்வேறு ஆய்வுகளின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகின் முன்னணி ஸ்மாட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான Apple தனது பயனாளர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல் வரைமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, யாருக்கெல்லாம் தூங்கும்போது ஸ்மார்ட்ஃபோன் அருகில் வைத்துக்கொள்ளும் பழக்கம் இருக்கிறதோ அவர்களின் உடல்நலம் பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஸ்மாட்ஃபோன் சார்ஜிங் நிலையில் அருகே தூங்குவது நல்லதல்ல என்று ‘பயனாளர் வழிகாட்டியில்’ குறிப்பிட்டுள்ளது. 

ஐ-ஃபோன் சார்ஜிங் செய்ய காற்றோட்டமான, சமதளப் பகுதியாக (எ.கா.மேஜை) இருப்பது சிறந்தது. முக்கியமாக தலையணை, போர்வை போன்றவற்றின் மீது வைத்து சார்ஜ் செய்ய கூடாது. ஏனெனில், ஐ-ஃபோன் சார்ஜ் செய்யப்படும்போது வெப்பம் உருவாகும் என்றும் அது வெளியேற தேவையான ஸ்பேஸ்  இருப்பது மிக அவசையாமது என்றும்க் தெரிவித்துள்ளது. போர்வை, தலையணை மீது வைத்து சார்ஜ் செய்யப்படும்போது ஐஃ-போனில் இருந்து வெப்பம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால், ஸ்மாட்ஃபோன் தீப்பற்றி வெடிக்கும் அளவிற்கான அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. போலவே, சார்ஜிங் இருக்கும்போது ஃபோனை தலையணைக்கு கீழே வைப்பதும் பாதுகாப்பற்றது. 

Apple வெளியிட்டுள்ள ‘பயனாளர் வழிகாட்டி’ விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை காணலாம்.

ஐ-ஃபோன், சார்ஜிங் அடாப்டர், வொயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றின் மீது (குறிப்பாக சார்ஜிங் செய்யப்படும்போது) உறங்கக் கூடாது.

பழுதடைந்த சார்ஜிங் வொயர், கேபிள் போன்றவற்றில் ஈரப்பத்தம் இருக்கும் நிலையில் அப்படியே சார்ஜ் செய்ய பயன்படுத்துவும் பாதுக்காப்பு இல்லாதது. ஈரத்தை துடைக்க வேண்டும் அல்லது புதிய கேபிள் / சார்ஜிங் அடாப்டர் வாங்க வேண்டும்.


 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.