WhatsApp: இனி Username பயன்படுத்தலாம் - வாட்ஸ் அப்பில் வரும் புதிய அப்டேட்!
ஜான்சி ராணி September 05, 2024 06:14 PM

வாட்ஸ்அப் புதிய இண்டர்ஃபேஸ் அப்டேட் செய்ய இருக்கிறது. தொடர்பு எண்களுக்கு பதிலாக பயனர்களின் பெயர் டிஸ்ப்ளே செய்யும் வசதி விரைவில் வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

வாட்ஸ் அப் அறிமுகம் செய்யப்பட்டத்தில் இருந்து அதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருவருடன் சாட் செய்வது மட்டும் அல்லாமல் தொழில் ரீதியாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் அப்டேட்களை வழங்கி வருகிறது. 

மெட்டா நிறுவனம் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை செய்வது வழக்கம். பயனாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. குழு வீடியோ கால் வசதியில் நபர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது,  'All', 'Unread', 'Groups'  Images, வீடியோ, லிங்க்ஸ் என சர்ச் டேப், மெட்டா ஏ.ஐ., ஃபேவரட் லிஸ்ட் உள்ளிட்ட அப்டேட்களை வழங்கியிருந்தது. 

WABetaInfo அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, பயனர்களுக்கு (Usernames) தனிப்பட்ட பயனாளர் பெயர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது தொடர்பு எண் இருந்தால் மட்டுமே வாட்ஸ் அப் எண்களை சேமிக்கவும், மெசேஜ் செய்யவும் முடியும் என்பது தற்போதுவரை இருந்து வரும் வழக்கம். ஆனால், இனி அப்படி இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான பெயர்களை வைத்துகொள்ளலாம். அதை பயன்படுத்தி உங்களுக்கு மெசேஜ் செய்ய வேண்டும் என்பவர்கள் உங்களை தொடர்பு கொள்ள முடியும். இதற்கான மெட்டா நிறுவனம் அப்க்ரேட்களை உருவாக்கி வருகிறது. 

இந்தப் புதிய அம்சம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பயனர் பெயரைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும். அது ஏற்கனவே வேறு ஒருவரால்  பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடாது. அதாவது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பயனர் பெயர் இருக்குமில்லையா? அதைப்போலவே இது வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் தொலைபேசி எண் இல்லாமலேயே பயனர் பெயர்களை பயன்படுத்தி ஒருவரை தொடர்புகொள்ள முடியும். இருப்பினும், ஏற்கனவே உங்கள் ஃபோன் எண்ணை வைத்திருப்பவர்களால் WhatsApp-இல் உங்களைக் கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வசதியில் தொடர்பு எண் அல்லது பயனர்பெயர் தெரிந்திருந்தால் மட்டுமே உங்களுக்கு மெசேஜ் செய்ய முடியும். அதோடு, பிரைவசி வசதிக்காக யாரெல்லாம் மெசேஜ் செய முடியும் என்பது குறித்தும் பயனர்கள் செட்டிங்ஸில் மாற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அப்டேட் எப்போது வெளியாகும் என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இது வாட்ஸ் அப் வெப் வர்ஷனிலும் கிடைக்குமா உள்ளிட்டவைகள் குறித்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. 

இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று  ஸ்டோரியில் ஒருவரை மென்ஷன் செய்யும் வசதி, வாட்ஸ் அப் ஸ்டேடஸுக்கு லைக் செய்யும் வசதி ஆகியவை டெவலப் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் இருப்பதுபோல அறிவிப்புகளை வழங்கி வந்தாலும் பிரைவசியை பாதுகாக்கவும் அப்டேட்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


© Copyright @2024 LIDEA. All Rights Reserved.