உணவு, தண்ணீர் கொடுக்க மறுப்பு; மதுபோதையில் ஹோட்டல் மீது லாரியை மோதிய டிரைவர்!
Vikatan September 08, 2024 05:48 AM

புனேயில் சாப்பாடு கேட்டு கொடுக்காத ஹோட்டலை, டிரைவர் ஒருவர் லாரியைக் கொண்டு மோதச்செய்துள்ளார். சோலாப்பூரில் இருந்து புனே நோக்கி லாரியை ஓட்டி வந்த சுக்ராம் என்பவர், புனே நகருக்குள் வந்ததும் ஹின்கன்காவ் என்ற இடத்தில் இருக்கும் ஹோட்டல் கோகுல் அருகில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்று சாப்பாடும், தண்ணீரும் கேட்டார். உள்ளே இருந்தவர்கள், ஹோட்டல் மூடப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

இதனால் கோபத்தில் சென்ற டிரைவர், லாரியில் அமர்ந்து ஹோட்டல் மீது லாரியைக் கொண்டு மோதினார். தொடர்ந்து பல முறை மோதச் செய்து ஹோட்டலை சேதப்படுத்தினார். இதில் ஹோட்டல் மட்டுமல்லாது அங்கு நின்ற இரண்டு கார்கள், இரண்டு இரு சக்கர வாகனகள் போன்றவையும் சேதமடைந்தன. டிரைவரின் செயலைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவரிடம் வண்டியை நிறுத்தும்படி கூறினர். ஆனால் டிரைவர் வண்டியை நிறுத்த மறுத்தார். உடனே பொதுமக்கள் லாரியை நோக்கி கற்களை வீசினர். ஒரு கட்டத்தில் லாரியின் சக்கரம் சிக்கிக்கொண்டது.

இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து லாரி டிரைவரை கைதுசெய்தனர். லாரி டிரைவர் குடிபோதையில் இது போன்று செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

Maha Vishnu : `தலைமையாசிரியர்கள் மட்டும் தண்டிக்கப்படுவதை எவ்வாறு ஏற்க முடியும்?' - சீமான் கண்டனம்!
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.