வாட்ஸ் அப்-ன் புதிய அப்டேட் - மெட்டா நிறுவனம் வெளியிட்ட தகவல்! இந்திய பயனர்களுக்கு எப்போது கிடைக்கும்?
ஜான்சி ராணி September 09, 2024 07:44 PM

மெட்டா நிறுவனம் புதிய அப்டேட்டை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் மற்ற தர்டு பார்டி ஆப்களில் இருந்து மெசேஜ், அழைப்புகளை மேற்கொள்ளும் சிறப்பம்சத்தை உருவாக்கி வருதாக தெரிவித்துள்ளது. 

மெட்டா நிறுவனம் தனது  பயனர்களின் வசதிக்காக பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் உள்ளது போன்ற வசதிகளை வாட்ஸ் அப்பிலும் வழங்க மெட்டா நிறுவனம் முயற்சித்து வருகிறது.  இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் இருக்கும் வசதிகளை மெட்டா வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்துள்ளது. இப்படி பல அப்டேட்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

இப்போது புதியதாக வாட்ஸ் அப் பயன்படுத்தி third-party மெசேஜிங் ஆப் மூலம் மெசேஜ் செய்யவும், வாட்ஸ் எண் மூலம் மற்ற செயலியை பயனபடுத்துவோருக்கு கால் செய்யும் வசதியையை கொண்டுவர உள்ளதாக மெட்டா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவித்துள்ளது. European Union’s Digital Markets Act (DMA)வாட்ஸ் அப் மட்டுமல்லாமல் ஃபேஸ்புக் மெசெஞ்ஜர் என இரண்டிலும் இந்த வசதி 2027-ம் ஆண்டிற்குள் வந்துவிடும் என்று தெரிவித்துள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union’s Digital Markets Act (DMA)) கொண்டுவரப்பட்டுள்ள டிஜிட்டல் சந்தை சட்டத்தின் தொழில்நுட்ப துறையில் பெரு நிறுவனங்கள் வளர்ந்து வரும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப், மெசெஞ்சர் ஆகியவற்றில் தர்டு பார்டி செயலிகள் மூலம் மெசேஜ், அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை வடிவமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 

வாட்ஸ் அப், மெசெஞ்ஜர் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான third party செயலிகளை தேர்வு செய்ய முடியும். தெரிவுகளுக்கு ஏற்ப பயனர்களுக்கு அழைப்புகள், மெசேஜ் வரும். combined inbo அல்லது  separate folder என இரண்டு ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2025-க்குள் தயாராகிவிடும் என்றும் வீடியோ, வாய்ஸ் கால் 2027-ல் அறிமுக செய்யப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து மெட்டா நிறுவனம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. 


© Copyright @2024 LIDEA. All Rights Reserved.