இது தெரியுமா ? ஆப்பிளை இட்லி பானையில் அவித்து தோல் நீக்கி ...
Newstm Tamil September 11, 2024 10:48 AM

உங்கள் சருமம் எந்த வகையாக இருந்தாலும் இந்த ஃபேஸ் வாஷ் உதவக்கூடும். இதற்கு உங்கள் சமையலறையில் இருக்கும் பொருள்கள் உதவக்கூடும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் 2 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த இரண்டையும் நன்றாக கலந்து முகம் முழுக்க தடவி விடவும். பிறகு 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும்.சருமம் மிகவும் வறண்டு இருந்தால் ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம். பிறகு டோனிங் மற்றும் மாய்சுரைசர் பயன்படுத்தலாம். வழக்கமான முறையில் இதை செய்து வரலாம். வறண்ட மற்றும் நார்மல் ஸ்கின்னுக்கு இது உதவக்கூடும்.

முட்டையின் மஞ்சள் கருவுடன் தேன் கலந்து நன்றாக கலந்துவிடவும். 3 பாதாமை தோல் உரித்து மென்மையாக பேஸ்ட் ஆக்கி இந்த பேக்கில் கலக்கவும். பிறகு இந்த பேக்கை முகம் முழுக்க தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து முகத்துக்கு பேக் செய்யவும்.பிறகு முகத்தை மந்தமான நீரில் கழுவி மாய்சுரைசர் பயன்படுத்தவும். முட்டையின் மஞ்சள் கரு வாடையை உண்டாக்கும் என்று நினைத்தால் லாவெண்டர் எண்ணெய் சில துளிகள் சேர்க்கலாம். இந்த பேக் வறண்ட மற்றும் நார்மல் ஸ்கின் இருப்பவர்களுக்கு நல்லது.

ஆப்பிளை இட்லி பானையில் அவித்து தோல் நீக்கி ஸ்பூனால் நன்றாக மசிக்கவும். பிறகு இதில் பால் க்ரீம் 1 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் அளவு கலந்து நன்றாக கலக்கவும்.இதை முகம், கழுத்து பகுதியில் நன்றாக தடவி பேக் முழுவதும் பயன்படுத்துங்கள். பிறகு 5 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள். இந்த பேக் வறண்ட மற்றும் நார்மல் ஸ்கின் இருப்பவர்களுக்கு உதவும்.

ஸ்ட்ராபெர்ரி- 3

தயிர் - 2 டீஸ்பூன்

இரண்டையும் ப்ளெண்டரில் கலந்து நன்றாக ப்யூரி பதத்துக்கு மாற்றி மெதுவாக கலக்கி எடுக்கவும். பிறகு முகத்தில் இதை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 7 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

இது முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை வெளியேற்றும். அதோடு இந்த பேக் எண்ணெய் சருமம் கொண்டிருப்பவர்களுக்கு உதவக்கூடும்.

காய்ச்சாத பால் 2 டீஸ்பூன் எடுத்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து நன்றாக கலந்து எடுக்கவும். இதை சருமம் முழுக்க தடவி வட்ட வடிவ இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும்.

இது சருமத்தை பிரகாசமாக வைத்திருக்கும். சருமத்திலிருக்கும் கூடுதல் எண்ணெய் பசையை வெளியேற்றும் என்பதால் எண்ணெய் பசை சருமத்துக்கு பெரிதும் பயனளிக்கும். உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டிருப்பவர்களுக்கு இது அற்புதமான ஃபேஸ் வாஷ் என்று சொல்லலாம்.

அன்னாசிப்பழத்துண்டுகளை எடுத்து மசித்து 2 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் சேர்க்கவும். பிறகு பேக்கிங் சோடா சிட்டிகை சேர்த்து பேஸ்ட் போல் தயாரிக்கவும்.இதை முகம் முழுக்க தடவி மென்மையாக மசாஜ் செய்து 5 நிமிடங்கள் முகத்தில் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இது முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சு எண்ணேய் சுரப்பை கட்டுப்படுத்தும்.

கடலை மாவு என்பது இயற்கையாகவே காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பொருள். 2 டீஸ்பூன் கடலை மாவில் பால், தயிர் மற்றும் பாலேடு சேர்த்து நன்றாக கலந்து மசாஜ் செய்து விடவும். இது முழுமையாக காய்ந்து போகும் வரை விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுத்தால் முகம் பளிச் பளிச் தான். இதை காம்பினேஷன் ஸ்கின் இருப்பவர்கள் செய்து கொள்ளலாம்

களிமண் என்று சொல்லகூடிய இது அனைத்துவிதமான சரும பிரச்சனைகளுக்கும் சிறந்த சுத்தப்படுத்திகளில் ஒன்று. இது அதிகப்படியான எண்ணேய், அழுக்கு , சருமத்துளைகளில் இருக்கும் மாசு என அனைத்தையும் போக்கி சருமத்தின் இறந்த செல்களை வெளியேற்றக்கூடியது.இதை கொண்டு முகத்தை சுத்தப்படுத்துவதால் இது பருக்களை எதிர்த்து போராடுவதோடு முகத்தை சோர்வில்லாமலும் வைக்க செய்யும். தயிரில் களிமண் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுத்தால் போதும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.