3 நாட்கள் பிறகு அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
Newstm Tamil September 11, 2024 05:48 PM

இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ6680க்கும், ஒரு சவரன் ரூ53440க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில் இன்று செப்டம்பர் 11ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 அதிகரித்து  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,715 க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.53,720க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில்  வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி விலைரூ.91.50க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.91,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம்அ குறைப்பதாக அறிவிக்கப்பட்டது.     இந்தியாவை பொறுத்தவரை   ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் நகையாக மட்டுமின்றி பெரும் சேமிப்பாகவும் அமைந்துள்ளது.  இந்த நிலையில், சமீபகாலமாக தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே சென்றது.  இதனால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் இனி வாங்கவே முடியாதோ என்ற நிலை உருவானது.

இதனால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்கம் விலையை குறைக்க ஏதேனும் அறிவிப்பு வருமா? என மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதம் மத்திய அரசு குறைப்பதாக அறிவித்ததும் நகைப்பிரியர்கள், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.  தங்கத்தின் மீதான இறக்குமதி வரியுடன் வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபரணங்கள் விலை கணிசமாக குறையலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.