இது தெரியுமா ? கொழுப்புக்களை விரைவில் கரைய வைக்கும் இயற்கையான ஜூஸ்கள்..!
Newstm Tamil September 12, 2024 01:48 PM

கடைகளில் உணவுகளை அதிகம் உட்கொள்வதால், உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகரித்து, அதனால் உடல் பருமனாகி, அதன் மூலம் அழையா விருந்தாளியாக கொலஸ்ட்ரால், மாரடைப்பு, மூட்டுவலி, மலட்டுத்தன்மை போன்றவற்றால் அதிகம் கஷ்டப்படுகின்றனர். நீங்கள் அப்படி உடல் எடை மற்றும் தொப்பையால் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கையான ஜூஸ்களை குடித்து வாருங்கள்.

முட்டைக்கோஸ் ஜூஸ் :-

முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள டார்டாரிக் ஆசிட், உடலில் சேரும் சர்க்கரை கொழுப்புக்களாக மாறுவதைத் தடுக்கும். மேலும் முட்டைக்கோஸில் வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது.

பார்ஸ்லி ஜூஸ் :-

பார்ஸ்லி ஜூஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள நச்சுமிக்க பொருளை வெளியேற்றும். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஜூஸ் குடித்தால், உடலில் உள்ள கொழுப்புக்கள் கரையவும் செய்யும்.

தேன் மற்றும் எலுமிச்சை ஜூஸ் :-

தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமெனில், 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் காலையில் உணவு உண்ணும் 1 மணிநேரத்திற்கு முன் குடித்து வர, நல்ல மாற்றம் தெரியும்.

இலந்தைப்பழ இலைகள் :-

இலந்தைப்பழ இலைகளில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் பி2 போன்றவைகள் வளமாக உள்ளது. இந்த இலைகளை இரவில் தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்

எலுமிச்சை சாறுடன் இஞ்சி சாறு :-

2 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறுடன், 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, மாலை வேளையில் இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வர தொப்பையைக் குறைக்கலாம்.

கேரட் ஜூஸ் :-

கேரட் ஜூஸ் கண்களுக்கு மட்டும் நல்லதல்ல. உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கவும் பெரிதும் உதவி புரியும். அதற்கு தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும்.

வெள்ளரிக்காய் ஜூஸ் :-

வெள்ளரிக்காயில் 90 சதவீத நீர்ச்சத்து உள்ளதால், இதனை குடித்தால், வயிறு விரைவில் நிரம்பிவிடும். மேலும் வெள்ளரிக்காய் கொழுப்பு செல்களை உடைத்துவிடும். அதுமட்டுமின்றி, வெள்ளரிக்காய் உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகர் :-

2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், கொழுப்புக்களை கரையும்.

பீச் ஜூஸ் :-

பீச் பழத்தில் கலோரிகள் குறைவு மற்றும் கொழுப்புக்கள் இல்லை. ஆகவே இந்த பழத்தினால் செய்யப்பட்ட ஜூஸை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால், ஒரே மாதத்தில் குறிப்பிட்ட அளவில் உடல் எடையைக் குறைந்திருப்பதைக் காணலாம்.
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.