தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த தவறியதாக கூறி வரும் 24ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பில் அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
வளர்மதி தலைமையில் நடைபெற்ற முந்தைய ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு, அந்த போராட்டங்களே சர்ச்சையை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நிலையில், மீண்டும் வளர்மதியை களம் இறக்கிவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.