நேற்று 1400 புள்ளிகள் உயர்ந்து உச்சம் சென்ற சென்செக்ஸ்.. இன்று திடீர் சரிவு..!
WEBDUNIA TAMIL September 14, 2024 12:48 AM

மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் நேற்று சுமாரான வர்த்தக நிலையுடன் ஆரம்பித்து திடீரென 1400 புள்ளிகள் உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் இன்று பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ள நிலையில் இன்றும் நேற்று போலவே உயருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று 189 புள்ளிகள் சரிந்து 82,7772 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 55 புள்ளிகள் சரிந்து 25,332 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் அதிகரித்துள்ளதாகவும் பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர், இன்போசிஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன

இனிவரும் காலத்திலும் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முன் தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று அதன் பின் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.