இன்று ஒரே நாளில் சுமார் 1000 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
WEBDUNIA TAMIL September 14, 2024 12:48 AM

தங்கம் விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் எவ்வளவு ஒரு கிலோ வெள்ளை எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6,825 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 960 உயர்ந்து ரூபாய் 54,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,280 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,240 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 95.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 95,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.