இதை தெரிஞ்சிக்கோங்க..! இளம் வயதில் நரை முடி தவிர்க்க சில வழிகள்
Newstm Tamil September 14, 2024 01:48 PM

* நரை முடியை முற்றிலும் ஒழிக்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொண்டால் போதும்.குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணையை நன்கு தலையில் தேய்த்து மஜாஜ் செய்ய வேண்டும். பின்னர் தலையை தேய்த்து குளிக்க வேண்டும்..இவ்விதம் செய்தால் நல்ல அடர்தியான முடியுடன் கரு நிற கூந்தலையும் பெற முடியும்.

* தலைக்கு குளித்த சில நிமிட நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவுதல் கூடாது.. தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. அதோடு முடு அதிகம் கொட்டவும் செய்கிறது..

* முளைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் நரை முடி கருப்பாக மாறும்.

* முருங்கைகீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் முடி உதிர்வது நிற்கும். முடி நீண்டுவளரும். நரை முடி அகலும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (ஐரந்)சுண்ணாம்புசத்து (க்யால்ஶியம்)கணிசமாக உள்ளது.

இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விடயம். ஆனால் தெரியாத விடயம் ஒன்று உள்ளது. அதாவது, நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி மறைந்து விடும் 
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.