அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் - அது என்ன தெரியுமா?
சேர்மசாமி September 14, 2024 07:44 PM

அரசு பள்ளிகளில் AI படிப்பு

சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை AI படிப்பை கொண்டு வர முழு முயற்சியும் நடைபெற்று வருகின்றன, அதற்காக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 525 அரசு பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி, என்.ஐ.டி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். தமிழக அரசின் பாடத்திட்டம் குறித்து குறை கூறுபவர்களுக்கு இதுவே சான்றாக இருக்கிறது. 

இந்த 500 என்ற அளவு வரும் கல்வி ஆண்டுகளில் 1000 திற்கு மேல் உயர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் தான் பள்ளி கல்வியில் முன்னோடியாக திகழ்கிறது. மத்திய அரசு வழிகாட்டும் 20 நெறிமுறைகளில் 18 நெறிமுறைகளை சிறப்பாக பின்பற்றி தமிழகம் சிறந்து விளங்குகிறது.

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஒன்றிய அரசு நிதி முக்கியமாக உள்ளது. தரமான கல்வியை தருகிறோம். உண்மையில் நாங்கள் கேட்கும் நிதியை விட நீங்கள் அதிகம் தர வேண்டும். இந்த கல்வி முறை சிறப்பானதாக உள்ளது என்று மற்ற மாநிலங்களுக்கும் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

இந்த சிறப்பான திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசு நிதி முக்கியமானதாக உள்ளது. அதில் கை வைப்பது வேதனைக்குறியதாக உள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் ஹைடெக் லேப்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும்.

முன்னதாக , நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி,

பல்வேறு தரப்புகளில் இருந்து ஃபார்முலா கார் பந்தயம் குறித்து பல எதிர்மறை கருத்துகளை பரப்புகிறார்கள். அது விளையாட்டு மட்டுமல்ல தமிழகத்திற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள், புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு இதெல்லாம் ஒரு பெரிய வாய்ப்பாக அமையும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.