இன்று ஆவணி கடைசி ஞாயிறு.. இதையெல்லாம் செய்ய மிஸ் பண்ணாதீங்க!
Dinamaalai September 15, 2024 06:48 PM

ஆவணி மாதம் ஆன்மிகத்திற்கும், ஆயுளை வளர்ப்பதற்கும் விசேஷமான மாதம். இந்த மாதத்தில் தான் சூரியன் தன்னுடைய பயண திசையை மாற்றுகிறார். அதனால் ஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகள் ரொம்பவே விசேஷமானது. இன்றுடன் ஆவணி மாதத்தின் இருந்த வருடத்திற்கான ஞாயிற்றுக்கிழமை நிறைவடைவதால் இன்றைய தினம் சூரிய வழிபாட்டை செய்ய தவறவே விடாதீங்க. ஆடி மாதம் முழுக்கவே அம்மன் மாதமாக கொண்டாடப்பட்ட நிலையில், ஆடி மாதம் முடிந்ததும் பலரும் நின்று போன காரியங்களைத் துவங்க ஆயத்தமாவார்கள்.

எந்தவொரு காரிய வெற்றிக்கும் முதன்முதலில், முதற்கடவுளான பிள்ளையாரைக் கும்பிட்ட பிறகு தானே துவங்குகிறோம். அந்த விநாயகர் அவதரித்த மாதம் ஆவணி மாதம் தான். கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததும் இந்த ஆவணி மாதத்தில் தான்.

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை!

எப்படி ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் விசேஷமானவையோ அதே போன் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 6.00 – 7.00 மணி வரை சூரிய ஓரையே இருக்கும்.

ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மீக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள். தேக நலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள், அந்த பயிற்சிகளை ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷமாகும்.

ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கும். ஆவணி மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.  விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக்கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வார்கள்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.