புரட்டாசி ஆரம்பமாகுது... அதிகாலை முதலே இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்!
Dinamaalai September 15, 2024 06:48 PM

இன்று ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை. அடுத்த இரு தினங்களில் புரட்டாசி மாதம் துவங்க உள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே இறைச்சி கடைகளிலும், மீன் மார்க்கெட்களிலும் அசைவ உணவு விரும்புபவர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதமிருப்பவர்கள் அசைவ உணவுகளை அந்த மாதம் முழுவதும் தவிர்ப்பதால், இன்று புரட்டாசிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே இறைச்சி சந்தைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. 

மீன்களின் விலையும் இன்று சந்தையில் குறைந்தே காணப்பட்டது. அதிகாலை முதலே காசிமேடு மீன்சந்தைக்கு ஏராளமானோர் மீன்களை வந்த வண்ணம் உள்ளனர்.  வஞ்சிரம், வவ்வால், ஷீலா, சங்கரா, பால் சுறா, தோல்பாறை உட்பட பல வகையான  மீன்கள் அதிகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்த போதிலும், விலையும் குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் உற்சாகமுடன் வாங்கி சென்றனர். 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.