நடுரோட்டில் பேஷன் ஷோ... மீன்களை உடையாக்கி கெத்து காட்டிய இளம்பெண்!
Dinamaalai September 16, 2024 02:48 AM

நடுரோட்டில், முழுவதுமாக மீன்களைக் கொண்டு உடை வடிவமைத்து, கையில் பெரிய மீன் ஒன்றை ஹேண்ட் பேக் போன்று வடிவமைத்து மாடலிங் செய்த இளம்பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

முன்பெல்லாம் பேஷன் ஷோ விழாக்களில் தான் புதுமையான உடைகளை அறிமுகம் செய்வார்கள். இப்போதெல்லாம், தங்கள் கற்பனைக்கேற்ற உடைகளை, ஆர்வமுள்ள சிலரே தயாரித்து அணிந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு லைக் அள்ளிவிடுகிறார்கள்.

அந்த வகையில், மாடலிங் பெண் ஒருவர் மீன்களை உடையாக்கி சமூகவலைத்தளத்தின் பார்வையை தன்பக்கம் திருப்பி உள்ளார். அவர் நூற்றுக்கணக்கான மீன்களை நூலில் கோர்த்து உடையாக அணிந்திருக்கிறார். அதை அணிந்து கொண்டு பேஷன்ஷோ மேடைக்கு பதிலாக ரோட்டில் அன்னநடை போட்டு வீடியோ பதிவு செய்துள்ளார். 

மீன்களை நெக்லஸ் போலவும் அணிந்துள்ளார். ஒரு பெரிய மீனை, நன்றாக வாயைத் திறக்க வைத்து, கைப்பைபோல மாற்றி தூக்கி வருவது வலைத்தளவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  வலைத்தளப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகி 51 லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது. நெட்டிசன்கள், ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகளை பதிவிட்டனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.