அனுமதி இலவசம்... இன்னும் 2 நாள் தான் இருக்கு... 21,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி... மிஸ் பண்ணாதீங்க!
Dinamaalai September 16, 2024 04:48 AM

பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.. இன்னும் 2 நாள் தான் இருக்கு. மிஸ் பண்ணாதீங்க. உங்க குழந்தைகளையும் அழைச்சுட்டு போய் காட்டி மகிழுங்க. மகிழ்ச்சியின், சந்தோஷத்தின் சாவியைத் தொலைத்து விட்ட நாம் தான், அடுத்த தலைமுறையைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். அதனால உங்கள் குழந்தைகளை நாலு இடங்களுக்கு அழைச்சுக்கிட்டு போங்க. அந்த நான்கு இடங்கள் என்பது தியேட்டர், பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள் என்றில்லாமல் இப்படியான கண்காட்சிகளாக, பூங்காக்களாக, நூலகமாக இருக்கட்டும். சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லபாக்கத்தில் இம்மாதம் 17ம் தேதி வரை 21,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அனுதி இலவசம்.

குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்த தீவிர விநாயகர் பக்தரான கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளுடன் இலவசமாக விநாயகர் சதுர்த்தியையொட்டி கண்காட்சியை நடத்தி வருகிறார். இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம், கணேஷ் மகாலில் 21,000 விநாயகர் சிலைகளுடன் கூடிய கண்காட்சி தொடங்கியுள்ளது.

கண்காட்சியில் சிப்பிக்குள் முத்து போல பிள்ளையார், இருளிலும் மின்னும் ரேடியம் பிள்ளையார், திண்ணையில் படுத்து ஓய்வெடுக்கும் பிள்ளையார், சங்கு பிள்ளையார், சந்திராயன் பிள்ளையார், அத்திவரதர் விநாயகர், சொர்க்க வாசல் விநாயகர், ஸ்கூட்டர், சைக்கிள், கார், ரயில் ஓட்டும் விநாயகர், நர்த்தன கணபதி, காசியானந்த கணபதி என அரை இன்ச் உயரத்தில் இருந்து 8 அடி உயரம் வரையிலான பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன், இரும்பு, கண்ணாடி உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இந்த கண்காட்சியைப் பொதுமக்கள் இலவசமாக பார்த்து மகிழலாம். 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.