நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல்... விரைவில் அமல்!
Dinamaalai September 16, 2024 01:48 PM


இந்தியா  முழுவதும் பாஜக கடந்த ஆட்சியில் இருந்தே  ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. அதற்கான முயற்சிகள் பலனளிக்காமல் போன நிலையில் தற்போது அதே திட்டத்தை பாஜக மீண்டும் கையில் எடுத்துள்ளதாக  பிரபல ஊடகம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு தங்களுடைய அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ள நிலையில் இத்திட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என  சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதற்கான  தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ததால் நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் எனக் கூறப்பட்ட நிலையில் இதற்காக 18 அரசியலமைப்பு திருத்தங்களை குழு பரிந்துரை செய்துள்ளது.

இதற்கு மாநில சட்டசபைகளின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் கிடையாது எனவும், சில அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.  இந்த சீர்திருத்தங்களை செய்த பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கலாம் எனவும்  இந்த தேர்தல் முடிவடைந்து 100 நாட்கள் கழித்து உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் எனவும் நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்சி காலத்திலேயே பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த தீவிர முனைப்பு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.