இந்தி நமது அனைத்து மொழிகளையும் இணைக்கிறது... அமித்ஷா பேச்சு!
Dinamaalai September 16, 2024 03:48 PM

இந்தி நம்மையும் நமது அனைத்து மொழிகளையும் இணைக்கிறது. இந்திக்கும், பிற மொழிகளுக்கும் இடையே போட்டி இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.இந்தி தினத்தையொட்டி டெல்லியில் பாரத மண்டபத்தில் நடைபெற்ற அகில பாரத அலுவல் மொழி மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். 

அப்போது பேசிய அவர், “இந்தி தினம் என்பது இந்தியை ஒரு தொடர்பு மொழியாகவும், பொதுவான மொழியாகவும், தொழில்நுட்ப மொழியாகவும், இப்போது சர்வதேச மொழியாகவும் மாற்ற உறுதிமொழி எடுக்கும் ஒரு சந்தர்ப்பமாகும்.கடந்த 75 ஆண்டுகளில் இந்தி மொழி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறது. ஆனால் இந்திக்கு எந்த உள்ளூர் மொழியுடனும் போட்டி இல்லை என்பதை இந்த நேரத்தில் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

அனைத்து இந்திய மொழிகளுக்கும் இந்தி நண்பன் தான். அது குஜராத்தியாகட்டும், மராத்தியாகட்டும், தெலுங்கு, மலையாளம், தமிழ் அல்லது வங்காளி என ஒவ்வொரு மொழியும் இந்தியை வலுப்படுத்துகின்றன, இந்தியும் அவற்றை வலுப்படுத்துகிறது.இந்தி அலுவல் மொழியாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வைர விழாவைக் கொண்டாடுகிறோம். இந்தியை அலுவல் மொழியாக ஏற்று நாட்டின் அனைத்து உள்ளூர் மொழிகளையும் இந்தி மூலம் இணைப்பதன் மூலம், நமது கலாசாரம், மொழிகள், இலக்கியம், கலை, இலக்கணம் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கி நகர்கிறோம்.

இந்தி என்பது புவிசார் அரசியல் மொழி என்பதை விட புவிசார் கலாசார மொழியாகும். உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய எனது 2 அமைச்சகங்களின் கோப்புகள் மூலம் அனைத்து தகவல் தொடர்புகளும் இந்தி மூலம் செய்யப்படுகின்றன. இந்த நிலையை அடைவதற்கு 3 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.சர்வதேச மொழியாக மாறும் தருவாயில் உள்ள இந்தி, இன்று ஐ.நா.வின் மொழியாகவும், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இரண்டாவது மொழியாகவும் உள்ளது” என்று கூறினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.