இதப் பார்றா... ஒரு நாளைக்கு 1000 மிஸ்டு கால்... டார்ச்சர் செய்த காதலிக்கு சிறைத்தண்டணை!
Dinamaalai September 16, 2024 04:48 PM

 

தென்மேற்கு இங்கிலாந்தில் டெவோன் நகரில் தி ஜென்டில் டென்டல் சென்டரில் பல் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் டேவிட்  பாக்லீரோ (54). பாக்லீரோ மனைவி இறப்புக்கு பின் நர்ஸ் வேலை பார்க்கும் சோபி கால்வில் (30) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் இருவருக்கும் இடையில் காதல் முறிவு ஏற்பட்டதால் சோபி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
 

காதலனை இழக்க விரும்பாத சோபி, பிரேக் அப்  ஆன அடுத்த நாளே டேவிட்டின் செல் போனுக்கு  1,000 முறை போன் செய்துள்ளார். ஆனால் டேவிட் போனை எடுக்காமல் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை கண்காணிக்க அவரது  காரில் டிராக்கிங் டிவிஸ் பொறுத்தியுள்ளார் சோபி. இது பத்தாது என்று டேவிட்டின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே அவர் வரும்வரை வம்படியாக பெட்ரூமில் வெயிட் செய்துள்ளார். டேவிட் வந்ததும் அவரின் போனை பிடுங்கும் முயற்சியில் அவருடன் சண்டை போட்டுவிட்டு ஜன்னல் வழியே குதித்து தப்பியுள்ளார்.
 
சோபியின் இந்த அடாவடித்தனமான தொல்லைகளை தாங்க முடியாமல் மன உளைச்சலில் டேவிட் சோபி தன்னை தொடர்ந்து பின் தொடர்வதால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாவதும் டேவிட் அளித்த புகாரின் பேரில்  போலீசார் சோபியை கைது செய்தனர். வீட்டை உடைத்து உள்ளே சென்றது உள்ளிட்ட குற்றங்கள் நிரூபணமானதால் சோபிக்கு 1 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.