“நபிகள் நாயகம் குறித்து அவதூறு”… வாலிபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு… எந்த நாட்டில் தெரியுமா…?
SeithiSolai Tamil September 16, 2024 04:48 PM

பாகிஸ்தான் நாட்டில் ஒரு வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இர்பான் என்பவர் சமூக வலைதளத்தில் முகமது நபியை இழிவு படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் இந்த வருடம் இர்பானை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு பாகிஸ்தான நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வெளியானது.

அந்த தீர்ப்பில் குற்றம் உறுதியானதால் இர்ஃபானுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது இஸ்லாம் மதத்தின் கடைசி இறைத்தூதராக முகமது நபி போற்றப்படுகிறார். மேலும் அவரை இழிவுபடுத்துவது என்பது அந்த நாட்டில் மரணத்திற்குரிய குற்றம். இதனால்தான் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.