மறந்துடாதீங்க... பொங்கல் விடுமுறை ரிட்டர்ன் டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்!
Dinamaalai September 16, 2024 05:48 PM

மறந்துடாதீங்க... பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு கிளம்ப ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் இருக்கும் நினைவு, ரிட்டர்ன் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பலருக்கும் இருப்பதில்லை. சொந்த ஊருக்கு குடும்பத்தோடு போனதுக்கு அப்புறமா மீண்டும் சென்னைக்கு திரும்பும் போது ரயிலும் கிடைக்காமல், பேருந்துகளிலும் இடம் இல்லாமல் தனியார் ஆம்னி பேருந்துகளில் ஆயிரக்கணக்கில் பணத்தையும் கொடுத்து, விடிய விடிய நம்ம உசுரை அவன் கையில கொடுத்து தூக்கத்தையும் தொலைச்சு மறக்க முடியாத விடுமுறை கொண்டாட்டமா மாறிவிடக் கூடிய அபாயம் இருக்கு.

அதனால பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் மறக்காம திரும்பை சென்னை வருவதற்கான ரிட்டர்ன் டிக்கெட்டை போட்டுடுங்க. முண்டியடிச்சு முயற்சி செய்தும் ட்ரெய்ன் டிக்கெட் கிடைக்கலையா? இப்படி செய்து பாருங்க... கொஞ்சம் ஈஸியா ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இனி எப்போதுமே ரயிலில் முன்பதிவு செய்யும் போது இது போன்றவைகளை மனசுல வெச்சுக்கோங்க. ரயில் புறப்படும் இடமும், சேரும் இடமும் நாம் புக் செய்கிற இறங்கும் இடமும் ஒன்றாக இருந்தால் வெயிட்டிங் லிஸ்ட் கன்பார்ம் ஆக அதிக வாய்ப்பு இருக்கும்.

பொங்கலுக்கு ரயிலிலேயே சொந்த ஊருக்கு செல்லலாம். இந்த வழிமுறையைப் பயன்படுத்துங்க. இந்த வருடம் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை வருகிறது. அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான ஜனவரி 10ம் தேதி முதல் பொங்கள் விடுமுறைக் கொண்டாட்டம் தான். ஜனவரி 10, 11ம் தேதிகளுக்கான ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது. ஆன்லைனில் முன்கூட்டியே பயணிப்பவர்களின் பெயர், வயது, புறப்படும் இடம், சேரும் இடம் போன்ற தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளுங்க. காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்கியதுமே டிக்கெட் போட இது உதவியாக இருக்கும்.

அதே போன்று டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை எனில், வெயிட்டிங் லிஸ்ட்ல போடுவதற்கு என்று சில ரயில்கள் உள்ளன. நிறைய பேர் இரண்டு மூன்று ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள். எது கன்பார்ம் ஆகிறதோ அதைத் தவிர பிறவற்றை கேன்சல் செய்து விடுவார்கள். அதனால், நீங்கள் எந்த ஊருக்கு செல்கிறீர்களோ அந்த ஊர் வரை செல்கிற ரயிலில் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் ஈஸியாக கன்பார்ம் ஆகும். உதாரணத்திற்கு கேரளா செல்லும் ரயிலில்  மதுரைக்கு டிக்கெட் கன்பார்ம் ஆவதை விட, மதுரை செல்லும் ரயில்களில் ஈஸியாக கன்பார்ம் ஆகும்.


பொதுவா இரண்டு நாள் முழுசா விடுமுறை இருந்தாலே பாதி சென்னை காலியாகி விடும். சொந்த ஊர் நோக்கி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வருட பொங்களுக்கு  முன்பாக வேற இரண்டு நாட்கள் முழுசா விடுமுறை கிடைக்கிறது. கிட்ட தட்ட ஒரு வார காலம் கொண்டாட்டம் தான்.  குடும்பத்துடன் செல்வதால் ரயிலில் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணம் செய்ய திட்டமிடுவார்கள். கடைசி நேரத்தில் ரயில், பேருந்துகளில் டிக்கெட்டுகள் கிடைக்காத நிலை உருவாகிவிடும். பேருந்துகள், ரயில் நிலையங்களில் நிற்க கூட முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் பயணிகள் கூட்டமாகவே இருக்கும்.  

சென்னையில் இருந்து மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறார்கள். ரயில்களில் தற்போது 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  இன்னும் நேரமிருக்கு. 

2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகை 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது.15ம் தேதி மாட்டுப் பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை திங்கட்கிழமை வருகிறது.  நீண்ட நாள் விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமையே பயணம் செய்ய விரும்புவார்கள். 

ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. அப்படியே உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் ரிட்டர்ன் டிக்கெட் முன்பதிவு செய்ய ஞாபகப்படுத்திடுங்க.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.