உஷார்... இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் மின்தடை அறிவிப்பு!
Dinamaalai September 16, 2024 05:48 PM

மாற்று ஏற்பாடுகளைச் செய்துக்கோங்க மக்களே.. இன்று செப்டம்பர் 16ம் தேதி  இந்த மாவட்டங்களில் எல்லாம் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் மின் தடை என்று தெரிஞ்சுக்கோங்க.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தின் ஒரு நாளில் பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று செப்டம்பர் 16ம் தேதி திருப்பூர் மாவட்ட்டம்  பல்லடம் மின் வட்டத்திற்கு உட்பட சில பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


பல்லடம் மின் வட்டத்தில் உள்ள ஓலப்பாளையம் 110/11 கிலோவாட் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஜெகதுகுரு, செட்டிபாளையம், பச்சபாளையம், காங்கேயம் சாலை, சுக்கிடிபாளையம் மற்றும் வெள்ளமடை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாளையக்கோட்டை துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள கேபி கிராமன், அரச்சலூர், சிவன்மலை, மருதுரை, குட்டப்பாளையம் மற்றும் நத்தக்காடையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் மின் வட்டத்தின் கீழ் உள்ள காடையூர் 110/11 கிலோவாட் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாறை, மேட்டுப்பாளையம், இலியாம்புதூர் மற்றும் காங்கேயம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமான மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் K.K.ரோட்டில் நெடுஞ்சாலைத் துறையால் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் தடை ஏற்படும் மின் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.கேகே ரோடு, சாலாமேடு,வாரியார் தோட்டம், காமராஜர் நகர், சின்னப்பநகர், EB காலனி, ஜீவராஜ் நகர், துரையரசன் நகர், kk நகர், NNGO நகர், சீனுவாசன் நகர், ஆசாகுளம், எழில்நகர், ராமகிருஷ்ணா நகர்,NSK நகர் ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது. இதனால், நாளை 16.09.2024  திங்கட்கிழமை  காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்து

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.