சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த சித்தார்த்- அதிதி… வைரலாகும் Wedding Photos…
Tamil Minutes September 16, 2024 06:48 PM

சித்தார்த் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். இவர் நடித்தது மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளர் தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆகவும் பணியாற்றியுள்ளார் சித்தார்த்.

பல விளம்பர படங்களில் நடித்த சித்தார்த் கல்லூரி படிப்பை முடித்த பின்பு தயாரிப்பாளர் ஜெயேந்திரா மற்றும் ஒளிப்பதிவாளர் பி சி இராம் ஆகிய இருவரிடம் பயிற்சி பெற்றார். பின்னர் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் சேர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் முன்னணி கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சித்தார்த். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

தொடர்ந்து ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் போன்ற பல நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார் சித்தார்த்.

2023 ஆம் ஆண்டு சித்தார்த் சித்தா திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படத்தை தயாரிக்கவும் செய்தார். சித்தார்த் இந்த திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார். இது மட்டுமல்லாமல் இந்தியன் 2 படத்திலும் அடுத்ததாக இந்தியன் 3 திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் சித்தார்த். தனது நடிப்பிற்காக மூன்று தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளார் சித்தார்த்.

இந்நிலையில் தென்னிந்தியாவின் பிரபல நடிகையான அதிதி ராவ் மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். சமீப காலத்திற்கு முன்பு வீட்டார் முன்னிலையில் சிம்பிளாக நிச்சயதார்த்தத்தை முடித்து இருந்த சித்தார்த் மற்றும் அதிதி ராவ் அவர்களின் திருமணத்தை வெகு விமர்சையாக செய்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் இன்று சத்தம் இல்லாமல் திருமணத்தை முடித்து இருக்கின்றனர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஜோடி. தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.