உச்சம் தொட்ட தங்கம்... சவரன் ரூ55000 ஐ கடந்தது... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
Dinamaalai September 17, 2024 12:48 AM

 தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.   ஜூலை மாதம் கிடுகிடுவென உயர்ந்து  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்த நிலையில்  மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையும் மளமளவென சரிந்தது.

சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. உயரும்போது அதிக அளவில் உயர்வதும், சரியும்போது சொற்பமாக சரிவதும் என இருந்து வருகிறது.  வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,600க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்  சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது.  இந்நிலையில் இன்றும் தங்கத்தின்  விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று கிராமுக்கு ரூ15 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6880க்கும்,  சவரனுக்கு ரூ.120 உயர்ந்து  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே  வெள்ளி விலை கிராமுக்கு  ரூ1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ98க்கும், கிலோ வெள்ளி விலை ரூ.98000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.