இன்று ஐபோன் 16 சிரீஸ் விற்பனை இந்தியாவில் தொடக்கம்... அதிகாலை முதலே விற்பனை மையங்களில் குவிந்த வாடிக்கையாளர்கள்!
Dinamaalai September 20, 2024 05:48 PM

 உலகின் மிகவும் பிரபலமான ஐபோன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று  ஆப்பிள். இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய வகை செல்போன் மாடல்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ் போன்களை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9ம் தேதி அறிமுகம் செய்தது.  பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட ஐபோன் 16 சீரிசில் மொத்தம் 4 மாடல்கள் உள்ளன.

 இந்நிலையில், ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 புரோ, ஐபோன் 16 புரோ மேக்ஸ் ஆகிய ஐபோன் 16 சீரிஸ் போன்கள் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன. இதனையடுத்து, ஐபோன் 16 சீரிஸ் போன்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். அந்த வகையில் டெல்லி, மும்பையில் உள்ள ஐபோன் விற்பனை மையங்களில் அதிகாலை முதல் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.