பாலியல் புகார் வழக்கு விவகாரம்.. ஜானி மாஸ்டரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!
Dinamaalai September 21, 2024 03:48 AM

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜானி மாஸ்டரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உப்பரப்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டோலிவுட் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக பெண் உதவி நடன இயக்குனர் அளித்த புகாரின் பேரில் நரசிங்கி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் முதலில் ராயதுர்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், ஜூரோ எஃப்ஐஆர் பதிவு செய்து, வழக்கு நரசிங் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது, அங்கு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டர் கோவாவில் இருப்பதை அறிந்த சிறப்புப் படை போலீஸார், அவரை கோவாவில் கைது செய்தனர்.

பின்னர் அவர் ஹைதராபாத் அழைத்து வரப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உப்பரப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜானி மாஸ்டரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் ஜானி மாஸ்டரை செர்லோபள்ளி சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜானி மாஸ்டருக்கு அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.