பரபரப்பு வீடியோ... மைசூரு அரண்மனை வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட யானைகள்!
Dinamaalai September 21, 2024 07:48 PM


கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகையை  ஒட்டி கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. மைசூரு அரண்மனையில்  அமைதிக்கு பெயர் பெற்ற தசரா யானைகள் மைசூர் வளாகத்தில் மோதிக் கொண்டு ஓடியது அப்பகுதியில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது. அப்போது, மைசூர் அரண்மனை வளாகத்தில் நேற்று செப்டம்பர் 21ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு உணவு உண்ணும் போது தசரா யானைகளான தனஞ்சயா மற்றும் காஞ்சன் ஆகிய இரு யானைகளுக்கு இடையே சிறிய மோதல் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தனஞ்சய  யானை, காஞ்சனைத் தாக்கி துரத்த முயன்றது. அப்போது, காஞ்சன் யானை பாகன் இல்லாமலேயே முகாமிலிருந்து வெளியேறி, இரும்பு தடுப்புகளைத் தள்ளிக்கொண்டு ஓடியது. அங்கு மைசூர் அரண்மனையின் ஜெயமார்த்தாண்ட வாயிலில் உள்ள கண்காட்சி சாலை அருகே தப்பிச் சென்றது. அங்கிருந்த மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடத் தொடங்கினர்.  
இதையடுத்து தனஞ்சயவின் யானை பாகன் இறுதியில் சமாதானப்படுத்தினார்.  மேலும் தனஞ்சய யானையை மீண்டும் முகாமுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கஞ்சன் யானையும் சாந்தமானது.  இந்த யானையானது பாகன் மற்றும் வன அதிகாரிகளால் மீண்டும் முகாமுக்கு அழைத்து சென்றார். 


இச்சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுச் சொத்துக்கும் சேதம் ஏற்படவில்லை.  கடந்த 20 ஆண்டுகளில் தசரா யானைகள் முகாமில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை. தசரா யானைகள்,  பொதுவாக அமைதிக்கு பெயர் பெற்றவை. அவை பயிற்சி அமர்வுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியிலும், ராஜ மார்க்கா அல்லது தசரா ஊர்வல பாதையில் ஜம்பூ சவாரி ஊர்வலத்தில்  லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் கூட அமைதியாகவே  கம்பீரத்துடன்  நடந்து செல்லும்.
மைசூரில் தசரா நிகழ்வு என்றாலே யானை சவாரிதான் பலருக்கும் ஞாபகம் வரும். அங்கு ஜம்பு சவாரி ஊர்வலமானது மிகவும் பிரசித்தி பெற்றது.  சாந்தத்திற்கு பெயர் பெற்ற 2 யானைகளும்  திடீரென மோதலில் ஈடுபட்டு மைசூர் வளாகத்தில் ஓடிய இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.