பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி... ஆம்பூர் மேம்பால பணியில் சரிந்து விழுந்த சாரம்... 3 பேர் படுகாயம்!
Dinamaalai September 22, 2024 04:48 PM

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மேம்பால கட்டுமான பணியின் போது திடீரென சாரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.142 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆம்பூரில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதிய மேம்பாலத்தின் சாரம் திடீரென சரிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்த பிற தொழிலாளர்களும், பொதுமக்களுடம் இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மீட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.