ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை... போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை!
Dinamaalai September 23, 2024 01:48 AM

கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலை, காட்டிநாயனப்பள்ளி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம் அருகே, தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.  இந்த மையத்தில், நேற்று முன்தினம், ஊழியர்கள் பணத்தை நிரப்பி விட்டு சென்றனர்.

இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், ஏடிஎம் மையத்தின் வெளியிலும், உள்ளேயும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் கருப்பு மை தெளித்து அடைத்துள்ளனர். பின்னர் காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் வடமாநில கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.