இன்னும் 5 நாட்கள் தான் டைம்.. தீராத த.வெ.க கட்சி கொடி பிரச்சனை.. பி.எஸ்.பி அனுப்பிய நோட்டீஸ்!
Dinamaalai October 20, 2024 04:48 AM

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு அதில் யானை சின்னம் இருந்தது. ஆனால் யானை சின்னம் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு சொந்தமானது என்பதால் அந்த சின்னத்தை தமிழக வெற்றி கழகம் உடனடியாக நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னம் எந்தக் கட்சியின் சின்னத்துக்கும் இணையாக இல்லை. அதன்பிறகு, தேர்தல் ஆணையம் கொடியில் கட்சி சின்னங்களை தேர்வு செய்யாமல், அந்தந்த கட்சிகளே தேர்வு செய்வதால், ஒரு கட்சியின் சின்னம் மற்றொரு கட்சியின் கொடியில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் எந்த பிரச்சனையும் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் தற்போது பகுஜன் சமாஜ் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது யானை சின்னம் எங்களுடையது என்பதால் கட்சிக் கொடியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் 5 நாட்களுக்குள் கட்சி கொடியில் இருந்து யானை சின்னத்தை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளதால், கட்சிக் கொடியில் பிரச்னை எழுந்துள்ளது, தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.