மோகனுக்கு அடுத்ததாக அந்த விஷயத்தில் ஹாட்ரிக் கொடுத்த ராஜ்கிரண்... என்னென்ன படங்கள்னு தெரியுமா?
CineReporters Tamil October 20, 2024 04:48 AM

நடிகர் மோகன் தமிழ்ப்பட உலகில் முதலாவதாக நடித்த 3 படங்களுமே தொடர்ந்து சூப்பர்ஹிட். மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள். இவற்றில் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1980ல் வெளியான படம் மூடுபனி. பிரதாப்போத்தன், மோகன், ஷோபா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜாவின் இசை தேனமுதமாக இருந்தது. 1981ல் மகேந்திரன் இயக்கத்தில் மோகன், சுஹாசினி, பிரதாப் போத்தன் நடிப்பில் வெளியான படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே. இளையராஜாவின் இசையில் பாடல்கள் பிரமாதம்.

1981ல் துரை இயக்கத்தில் மோகன், பூர்ணிமா நடிப்பில் வெளியான படம் கிளிஞ்சல்கள். படத்தில் இளையராஜாவின் பாடல்கள் அத்தனையும் சூப்பர்ஹிட். இந்த 3 படங்களுமே தமிழ்த்திரை உலக வரலாற்றில் அதிக நாள்கள் ஓடி வசூலிலும் சாதனை படைத்தது. அவருக்கு அடுத்தபடியாக சூப்பர்ஹிட்டான வாய்ப்பு ராஜ்கிரணுக்கு மட்டும் கிடைத்துள்ளது.

இளையராஜாவின் 100வது படம் மூடுபனி. ராஜ்கிரணுக்கு முதல் 3 படங்கள் என்றால் என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசா தான் படங்கள். 1989ல் என்ன பெத்த ராசா படத்திலேயே ராஜ்கிரண் நடித்து விட்டார். ஆனால் அதில் ராமராஜன் தான் கதாநாயகன். ஹீரோவாக அறிமுகமானார் என்றால் 1991ல் வெளியான என் ராசாவின் மனசிலே. இந்தப் படத்தில் நடித்து இருந்தார்.


கஸ்தூரி ராஜா தயாரித்து இயக்கி; இருந்தார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் பிரமாதமாக இருந்தன. இந்தப் படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா நடித்து அசத்தினார். வடிவேலு இந்தப் படத்தில் தான் அறிமுகமானார். தொடர்ந்து 1993ல் ராஜ்கிரண் தயாரித்து இயக்கி நடித்த படம் அரண்மனைக்கிளி.

இதில் அகானா, வடிவேலு, காயத்ரி உள்பட பலர் நடித்து இருந்தனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் பிரமாதம். அதைத் தொடர்ந்து 1995ல் ராஜ்கிரண் நடித்து தயாரித்து இயக்கிய படம் எல்லாமே என் ராசா தான். இந்தப் படத்தில் சங்கீதா, ரூபாஸ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் பிரமாதம். ராஜ்கிரணுக்கும் அவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுது. எல்லாப் பாடல்களுமே சூப்பர்ஹிட் ஆகி விடுகிறது. அந்த வகையில் இந்த 3 படங்களுமே மெகா ஹிட் ஆனது. குறிப்பாகத் தாய்மார்களைப் பெரிதும் கவர்ந்தது. குடும்ப்பாங்கான கதை அம்சம் கொண்ட படங்களை எடுத்ததால் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ராஜ்கிரணைக் கொண்டாடினர்.�

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.