இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் – பெங்களூரு – நான்காம் நாள் – 19.10.2024
Dhinasari Tamil October 20, 2024 04:48 AM
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் KVB

இந்தியாநியூசிலாந்து முதல் டெஸ்ட் – பெங்களூரு – நான்காம்நாள் – 19.10.2024

முனைவர்கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா அணி (முதல் இன்னிங்க்ஸ் – 46,ஹென்றி 5-15, ஓ ரூர்க் 4-22, இரண்டாவதுஇன்னிங்க்ஸ் (462, ஸர்ஃப்ராஸ் கான் 150, ரிஷப்பந்த் 99, விராட் கோலி 70, ரோஹித் ஷர்மா 52, ஜெய்ஸ்வால் 35, மேட் ஹென்றி 3/102, ஓ ரூர்கே3/92, அஜாஸ் படேல் 2/100); நியூசிலாந்துஅணி (402, கான்வே91 ரன், ரச்சிந்த்ரா 134, டிம்சௌதீ 65, வில் யங் 33, ஜதேஜா 3/72, குல்தீப் 3/99, சிராஜ் 2/84, பும்ரா 1/41, அஷ்வின்1/94); இரண்டாவது இன்னிங்க்ஸ்0/0; இந்திய அணி 107ரன்கள் முன்னிலையில் உள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில்462 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இதனால் நியூசிலாந்துஅணியின் வெற்றிக்கு 107 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய அணி தோல்வியை தவிர்க்கபோராடுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2001ஆம் ஆண்டு கொல்கத்தாமைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணிமுதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி வெறும் 171 ரன்கள்மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால்ஆஸ்திரேலியா அணி ஃபாலோ ஆன்கொடுத்தது. 274 ரன்கள் பின் தங்கிய நிலையில்இந்திய அணி 2வது இன்னிங்ஸைதொடங்கியது. அன்றைய நாளில் இந்திய அணி டிரா செய்யக்கூட வாய்ப்பில்லை என்று பார்க்கப்பட்டது. ஆனால் வி.வி.எஸ். லக்ஷ்மண் – ராகுல்டிராவிட் இருவரும் ஒருநாள் முழுக்க பேட்டிங் செய்து ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். 2வது இன்னிங்ஸில் இந்தியஅணி 657/7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதன்பின் ஆஸ்திரேலியா அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிகச்சிறந்த வெற்றி இதுதான். ஃபாலோ ஆன் பெற்ற பின்இந்திய அணி ஃபீனிக்ஸ் பறவையாகமீண்டெழுந்து மிரட்டியது.

தற்போது அப்படியான ஒரு ஆட்டத்தை 23 ஆண்டுகளுக்குபின் மீண்டும் இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தினர்.பெங்களூர் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில்46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின்களமிறங்கிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணி 2வது இன்னிங்ஸை356 ரன்கள் பின் தங்கிய நிலையில்தொடங்கியது. டிரா செய்வதற்கே மிகப்பெரியதிட்டம் தேவை என்ற நிலைஇருந்தது.

வரலாறுபடைத்த சர்ஃபராஸ் கான்

இதனால் மழை வந்துதான் இந்திய அணியை காப்பாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருதினர். ஆனால் டிரா செய்வது எங்களின்திட்டமல்ல.. வெற்றி பெறுவதே எங்களின் திட்டம் என்று அட்டாக்கிங் ஸ்டைலில் இந்திய அணி பொளந்து கட்டியது. கேப்டன் ரோஹித் சர்மா 63 பந்துகளில் 52 ரன்களும், விராட் கோலி 102 பந்துகளில் 70 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதன்பின் சர்ஃபராஸ் கான் – ரிஷப் பண்ட் இருவரும் சிறப்பாக ஆடினர்.

இந்திய வீரர்களுக்கு ஸ்பின்வீசினால் என்ன நடக்கும் என்பதைஇருவரும் பேட் மூலம் பதிலாகஅளித்தனர். 356 ரன்கள் பின் தங்கியதை பற்றிஎந்த கவலையும் கொள்ளாமல், அசால்ட்டாக அந்த ரன்களை எட்டினர்.சர்ஃபராஸ் கான் அபார சதமும்,ரிஷப் பண்ட் அரைசதமும் அடித்து அசத்தியதன் மூலமாக இந்திய அணி ஃபீனிக்ஸ் பறவையாய்மீண்டது. இந்திய அணியின் ஸ்கோர் 400 ரன்களை கடந்ததோடு, நியூசிலாந்து அணியை விடவும் 50 ரன்கள் முன்னிலை பெற்றது. இன்னும் இந்திய அணியின் கைகளில் 7 விக்கெட்டுகள் இருந்ததால், நிச்சயமாக வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்பட்டது.

இந்தியஅணியின் சரிவு

ஆனால் அடுத்த சில ஓவர்களிலேயே இந்தியஅணியின் பேட்ஸ்மேன்கள் சீட்டுக் கட்டைப் போல் சரிந்தனர். இதனால்இந்திய அணி 2வது இன்னிங்ஸில்462 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால்நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 107 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடைசி நாள் ஆட்டத்தின் இந்தியஅணியின் ஸ்பின்னர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் மூவரை எதிர்த்து பேட்டிங் செய்வது எளிதான விஷயமல்ல. ஆனால் போதிய இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், இந்திய அணியை காப்பாற்ற மழை வந்தால் மட்டுமேவாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்,ஓய்வு பெற்ற வானிலையாளர்,எண் 2, முதல் மாடி, கண்ணபிரான் கோயில் தெரு, பெரம்பூர், சென்னை 11
Dr.K.V.Balasubramanian,M. Sc.(Physics), M.A. (Tamil &History), M. Phil.,Ph. D.Meteorologist (retd.),
No. 2, I Floor, Kannabiran Koil Street, Perambur, Chennai-11Mobile: +919884715004

News First Appeared in
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.