அதிக குழந்தைகளை பெத்துக்கோங்க… தென்னிந்திய குடும்பங்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்..!!
SeithiSolai Tamil October 21, 2024 06:48 AM

விஜயவாடாவில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஆந்திரா முதல்வரான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் தென் இந்தியாவில் வாழும் குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இதைத்தொடர்ந்து முன்னதாக எனது ஆட்சியில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறினேன். நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் 10 ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையை குறைத்தீர்கள்.

அதோடு 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை நான் அமல்படுத்தினேன். ஆனால் இப்போது அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற
சட்டத்தை கொண்டு வர ஆந்திரா அரசு திட்டமிட்டுள்ளது. தென் மாநிலங்களில் கருவுறுத்தல் விகிதம் 1.6 ஆக குறைந்துள்ளது. ஆனால் சராசரியாக தேசிய கருவுறுத்தல் விகிதம் 2.1 ஆக உள்ளது. வருகிற 2047-ம் ஆண்டிற்குள் தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும். இந்த பிரச்சனை வருவதற்கு காரணம் நாட்டில் உள்ள இளைஞர்கள் வேறு நாட்டிற்கு தஞ்சம் புகுவதால் ஏற்படுகிறது என்று அவர் கூறினார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.