தமிழகம் முழுவதும் 3500 டாஸ்மாக் கடைகளில்… அடுத்த வாரம் முதல் அமலாகிறது புதிய விதிமுறை…!!!
SeithiSolai Tamil October 21, 2024 06:48 AM

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக அரசு அதிக வருமானம் வருகிறது. இருப்பினும் டாஸ்மாக் கடைகளால் பலர் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழிப்பதால் அரசாங்கம் மதுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தான் வருகிறது. தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்ற நிலையில் டாஸ்மாக் கடைகளில் புதிய கட்டுப்பாடுகள் வர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி அடுத்த வாரம் முதல் 3500 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் 2-வது விற்பனை கவுண்டர் அமல்படுத்த உள்ளதாம். அதாவது டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் மது விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கத்திலும் 2-வது கவுண்டரை திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக மதுபானங்களை விற்பதாக புகார் எழுந்ததால் க்யூ ஆர் கோடு மூலமாகவும் பில்லிங் மூலமாகவும் விற்பனை செய்யும் திட்டத்தையும் அறிமுகப்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.