2K, 10K இந்த "K" அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? எங்கிருந்து வந்தது? ஏன் நாம் இதை பயன்படுத்துகிறோம்? முழு விவரம் இதோ!
Seithipunal Tamil October 24, 2024 07:48 AM

கடந்த சில வருடங்களாக ஆயிரங்களின் எண்ணிக்கையை குறிப்பிடும்போது "K" என்ற எழுத்தை பயன்படுத்தி வருகிறோம் . 

குறிப்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோக்களின் வியூஸ், ஃப்லோவ்ர்ஸ் எண்ணிக்கையை குறிக்க 10k, 2k, 5k என்றெல்லாம் குறிப்பிட்டு வருகிறோம்.

மேலும் நாம் வாங்க கூடிய சம்பளத்தை கூட 30k, 20k, 15k குறிப்பிடும் பழக்கம் வெகுவாக வந்துள்ளது. 

ஆயிரம் என்ற மதிப்பை சுருக்கி "K" என்ற எழுத்து ஏன் பயன்படுத்தப்படுகிறது" "K" என்ற எழுத்துக்கு என்ன அர்த்தம்? என்பது குறித்த தகவல் உங்களுக்கு தெரியுமா?

"K" என்பது கிரேக்க வார்த்தையில் கிலோய் (chilioi) என்று அர்த்தம். இந்த கிலோ என்ற வார்த்தையை தான் பிரெஞ்சுக்காரர்கள் கிலோ என்று மாற்றி பயன்படுத்தி வந்தனர்.

உதாரணமாக கிலோ கிராம், அதாவது ஆயிரம் கிராம் என்பதை சுருக்கி கிலோ கிராம் (1KG) என்றும், கிலோமீட்டர் அதாவது ஆயிரம் மீட்டர் என்பதை சுருக்கி கிலோமீட்டர் (1KM) என்று பயன்படுத்தி வருகின்றனர். நாமும் அதைத்தான் பயன்படுத்திக்கிறோம்.

அந்த வகையில் தான் தற்போது ரூபாய் மதிப்புகளையும், சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு வரக்கூடிய வியூஸ் மற்றும் பாலோவர்ஸ்களின் எண்ணிக்கையை குறிப்பிடும்போது 10k, 20k என்றெல்லாம் நாம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம்.

இந்த தகவல் இதுவரை உங்களுக்கு தெரியவில்லை என்றால், தெரியாத உங்களின் நண்பர்களுக்கு பகிருங்கள்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.