வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. 5ஜி- ய விடுங்க 6ஜி நெட்வொர்க் வர போகுது…!!!
SeithiSolai Tamil October 24, 2024 07:48 AM

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையின் மிகப் பெரிய முன்னேற்றமாக 6ஜி நெட்வொர்க் சேவையை விரைவில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி முடிந்து, 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியா தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா 6ஜி நெட்வொர்க்கை முதன்முதலில் செயல்படுத்தும் நாடாக உருவாகவுள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா குறிப்பிட்டுள்ளார்.

இந்த 6ஜி நெட்வொர்க் உலகளாவிய ஒத்துழைப்புடன் முன்னேறும் எனவும், இதனால் இந்தியா 6ஜி தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைகளில் 10% பங்கைக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது. இதில், 6ஜி தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தவும், இணையப் பாதுகாப்பு கட்டமைப்பை உறுதிப்படுத்தவும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

6ஜி சேவையை வழங்குவதாக ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் வோடஃபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன. 6ஜி சேவையின் வருகையுடன், இந்திய மொபைல் வாடிக்கையாளர்கள் வேகமான மற்றும் பயனுள்ள இணையத்தை அனுபவிப்பார்கள். இது தொலைத்தொடர்பு துறையை உயர்த்தி, நாட்டை உலகளவில் பெரிய சக்தியாக மாற்றும்.

இந்த நவீன தொழில்நுட்பத்தின் அறிமுகம், இந்தியாவின் தொலைத்தொடர்பு துறைக்கு மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் புதிய திறன்களை உருவாக்கும். 6ஜி நெட்வொர்க் சேவையை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா உலகத் தொலைத்தொடர்பு போட்டியில் முன்னணி நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.