''10 வயதில் இருந்து மகன் குடி போதைக்கு அடிமை''.. மாவட்ட ஆட்சியரிடம் கதறும் தாய்!
Dinamaalai October 25, 2024 01:48 AM

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் 45 வயது பெண் ஒருவர் கலந்து கொண்டார். அங்கு வந்த பெண் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, "எனக்கு சொந்தமான வீடு, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது அந்த வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அந்த வீட்டில் தங்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். தற்போது கால்நடை கொட்டகையில் தங்கி உள்ளோம். 


எனக்கு 45 வயது, 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகனுக்கு திருமணமாகிவிட்டது. மற்றொரு மகன் 10 வயதில் இருந்து குடிகாரனாக மாறி இன்று வரை குடிகாரனாகவே இருக்கிறான். ஆங்காங்கே வேலைக்குச் சென்றாலும், அதில் கிடைக்கும் பணத்தை குடிப்பதற்காக பயன்படுத்துகிறார். அது போதாதென்று என்னிடம் பணம் வாங்கிக் குடிப்பார். நான் தென்காசியில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். இங்கு என் எரியாவிலும் டாஸ்மாக் மூடினால், மகன் வேலைக்குச் சென்று வீட்டு வேலைகளைக் கவனிப்பான். எனக்கு அரசு வீடு கட்டித் தர வேண்டும் என்பதற்காக நான் வரவில்லை.

என் ஏரியாவில் டாஸ்மாக் மூடினால் என் மகன் வேலைக்கு வந்து என் வீட்டை கட்டி முடிப்பான். ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கை போராட்டம் தான், பிழைப்புக்காக எனது இரண்டு மாடுகளை விற்பனை செய்து தான் சாப்பிட்டு வாழ்க்கையை தள்ளி வருகின்றேன். டாஸ்மாக் மூடி அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.