"தரமான, தைரியமான திரைப்படம் நந்தன்" - நடிகர் ரஜினி பாராட்டு!
Dinamaalai October 26, 2024 07:48 PM

 

தரமான, தைரியமான படம் சசிகுமாரின் 'நந்தன்' என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நந்தன் படத்தைப் பாராட்டி இயக்குநர் சரவணனிமும், நடிகர் சசிக்குமாரிடம் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகர் சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் 'நந்தன்'. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் பேசியிருக்கிறது என்று படம் வெளியான போது பலரும் பாராட்டிய நிலையில், தற்போது ஓடிடியில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இப்படத்தை இயக்கி, தயாரித்த சரவணனையும், நடிகர் சசிக்குமாரையும் தொலைப்பேசியில் அழைத்து தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். 

நடிகர் சசிகுமார் - இயக்குநர் இரா . சரவணன் - விநியோகஸ்தர் ட்ரைடன்ட் ரவி ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், 'நந்தன் மிகத் தரமான, தைரியமான படம்' என மனம் திறந்து பாராட்டினார்.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.