Suriya : நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து சூர்யா... கலைகட்டிய கங்குவா ஆடியோ லாஞ்ச்
ராகேஷ் தாரா October 27, 2024 02:14 AM

கங்குவா ஆடியோ லாஞ்ச்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த் வீடியோ மூலம் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். அடுத்தடுத்து சூர்யா படங்களை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் , ஆர்.ஜே பாலாஜி  சூர்யவின் தம்பி நடிகர் கார்த்தி அப்பா சிவகுமார் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். 

சூர்யாவை அரசியலுக்கு வரச்சொன்ன போஸ் வெங்கட்

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் போஸ் வெங்கட் நடிகர் சூர்யாவை அரசியலுக்கு வரும்படி மேடையில் பேசினார்.

நிறைய யூடியூப் சேனல்களில் நான் அரசியல் பேசி வருவதால் ஏன் இந்த மேடையில் அரசியல் பேசக்கூடாது என்கிற ஒரு ஆசை. ஒரு சூப்பர்ஸ்டார் தனது ரசிகர்களை வழிநடத்த வேண்டும் என்றால் எப்படி நடத்த வேண்டும் என்றால் சூர்யா சார் உங்கள் மாதிரி வழிநடத்த வேண்டும். தர்மம் செய்ய சொல்லிக் கொடுத்திரணும் , உதவி செய்ய , மக்களோட பிரச்சனைகளை எப்படி கவனிக்க வேண்டும் என்பதை சொல்லி கொடுத்திடனும்.

எல்லாத்துக்கும் மேல் படிப்பை கொடுத்திடனும். அதற்கு பிறகு அரசியலுக்கு வர வேண்டும். ஒரு தலைவன் என்ன வேலை செய்கிறான் என்பது எல்லாம் முக்கியம் இல்லை. அவன் பேச்சாளனாக இருக்கலாம் எழுத்தாளனாக இருக்கலாம். ஆனால் ஒரு தலைவன் தனது ரசிகர்களை முட்டாளாக வைத்திருக்கக் கூடாது அவனை அறிவாளியாக வைத்திருக்க வேண்டும் . அவனை படிக்க வைக்கணும் அறிவை வளர்க்க வேண்டும். அப்படிபார்த்த நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். நிறைய நடித்து எங்களுக்கு நிறைய படங்களை கொடுத்த பிறகு நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் " என போஸ் வெங்கட் தெரிவித்தார்

விஜய் பற்றி சூர்யா

இதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா " போஸ் வெங்கட் இந்த மேடையை வேற ஒன்றாக மாற்றிவிட்டார். லோயோலா காலேஜில் நான் படித்தபோது எனக்கு சீனியர் ஒருவர் இருந்தார். அவரை நான் பாஸ் என்று தான் அழைப்பேன் . அவர்தான் இன்று துணை முதலமைச்சராக இருக்கிறார். எப்போதும் வேண்டுமானால் அவரை போய் அனுகலாம் அந்த அளவிற்கு சகஜமாக இருப்பார். இன்னொருவர் இருக்கிறார். அவர் இப்போது ஒரு புது பாதையை துவங்கியிருக்கிறார். அவர் வரவும் நல்வரவராக அமையட்டும்' என விஜய் பற்றி நடிகர் சூர்யா பேசினார் .

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.