TVK Vijay: `விஜய் சார் சொல்லப்போகும் சர்பிரைஸ்...' - தவெக மாநாட்டுத் திடலில் தாடி பாலாஜி!
Vikatan October 27, 2024 03:48 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு 'வெற்றி கொள்கை திருவிழா' என்ற பெயரில் இன்று நடைபெறவிருக்கிறது. விஜய்யின் அழைப்பின் பேரில் நடிகர் 'தாடி பாலாஜி' மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், மாநாட்டுத் திடலில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

அவர் பேசுகையில், "உங்களை மாதிரிதான் நானும் மாநாட்டுக்காக ஆர்வமா காத்திருக்கேன். கூட்டத்தில் தலைவர் என்ன பேசப்போறாருங்கிற ஆவல் மக்களை மாதிரியே எனக்கும் இருக்கு.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆனந்த் அண்ணன் மூலமாக கூப்பிட்டு மாநாடு வேலைகளை பார்த்துக்க சொன்னாரு. அன்னையில இருந்தே நானும் இவங்க கூட சேர்ந்து வேலை பார்த்திருக்கேன். எவ்வளவோ பேரு இருக்கும் போது என்னைய நம்பி சில வேலைகளை அவர் கொடுத்ததுல ரொம்ப சந்தோஷம்.

மக்களுக்கு நல்லது பண்ணனும்னு விஜய் சார் நிறைய திட்டங்கள் வச்சிருக்காரு. அதை அவரே சொல்லும்போது சர்ப்ரைஸாவும் எல்லாருக்கும் மகிழ்ச்சியாவும் இருக்கும்.

விஜய் சார்க்கிட்ட நல்ல டீம் இருக்கு. தொண்டர்களும் நிர்வாகிகளும் மாநாட்டை அவங்க வீட்டு விழா மாதிரி கொண்டாடுறாங்க.

ஆனந்த் அண்ணன் ஒவ்வொரு நிமிசமும் களத்துல நின்னு வேலை பார்க்குறாரு. சினிமால இருந்தும் சிலருக்கு இன்வைட் போயிருக்கு. நிறைய பேர் வருவாங்கனு எதிர்பார்க்குறோம். தளபதியை சக நடிகரா பார்த்திருக்கேன். இப்போ தலைவரா பார்க்குறேன்." என்றார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.