“அது மட்டும் நடந்துட்டா”… பாகிஸ்தான் இந்திய அணியை நிச்சயம் வீழ்த்தும்… அடித்து சொல்லும் வாசிம் அக்ரம்..!!!
SeithiSolai Tamil November 06, 2024 01:48 AM

நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான 3 நாள் டெஸ்ட் தொடர் மும்பையில் நடைபெற்றது. இதில் நியூசிலாந் அணி அபார வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்திய அணி 24 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது நியூசிலாந்தின் பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளாமல் விட்டதுதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 நாள் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் போட்டியிட உள்ளது. இந்த முதலாவது போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில், போட்டியை குறித்து கமெண்டரி செய்யும் மைக்கேல் வாகன் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் இந்திய அணியின் தோல்வி குறித்து விவாதித்தனர்.

இந்த விவாதத்தில் கூறப்பட்டவை, மைக்கேல் வாகன், இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவதை பார்க்க ஆவலாக உள்ளேன் என கூறினார். இதற்கு பதில் அளித்த வாசிம் அக்ரம், அது மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியாக இருக்கும் இரு நாடுகளும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளன எனக் கூறினார். இதனை அடுத்து மைக்கேல் நியூசிலாந்தை போலவே சுழல் பந்துவீச்சை பாகிஸ்தான் மேற்கொண்டால் இந்தியா நிச்சயமாக தோற்றுப் போகும் என கூறினார். இதற்கு பதில் அளித்த வாசிம் கண்டிப்பாக நடக்கும் இந்தியா சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோற்றுப் போனது. இவ்வாறு உரையாடினர்

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.