அண்மையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் கடந்த மாதம் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். தொடர்ந்து, சீமான் தன்னிடம் பேசியது வருத்தமாக இருப்பதாக தெரிவித்த விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி விலகியுள்ளார். இது தொடர்பாக இளவஞ்சி தெரிவித்துள்ளதாவது, நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும், பெண்களின் வளர்ச்சி இவர்களுக்கு
பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வந்த காளியம்மாளை பார்த்து சீமான் பயப்படுவதாக தெரிவித்த அவர், கட்சியில் யார் எவ்வளவு வளர வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள் என்றும், வாய்ப்பு அளிப்பதில் பாகுபாடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.