மிஸ் பண்ணாதீங்க... சென்னை ரிப்பன் மாளிகையை பொதுமக்கள் சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு!
Dinamaalai November 10, 2024 12:48 AM

  
 
சென்னையில் பிரசித்தி பெற்ற பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அந்த வகயில் மிகப் பழமைவாய்ந்த ரிப்பன் மாளிகையும் ஒன்று. இதில் தான்  தற்போது சென்னை மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி  ரிப்பன் மாளிகையை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி அளித்துள்ளது.  
'சிங்கார சென்னை 2.0-ன் கீழ் சென்னை மக்கள், ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க விரும்பினால் commcellgcc@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 9445190856 என்ற மொபைல் எண்ணில் அழைத்து தகவல்களை பெறலாம்.

தனி நபராகவோ அல்லது பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மூலம்  கூட்டாகவோ அனுமதி கோரலாம். ரிப்பன் மாளிகையின் வரலாறு அதன் கட்டுமானம், மாநகராட்சி செயல்படும் முறை பற்றி தெரிந்துகொள்ளலாம்' எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் ரிப்பன் மாளிகை  1909 ம் ஆண்டு   வைசிராயாக இருந்த மிண்டோ பிரபுவால் அடிக்கல் நாட்டப்பட்டது.

1913 ம் ஆண்டு   லோகநாத முதலியார் என்பவர் இதனை ரூ. 7.50 லட்சம் செலவில் கட்டிக்கொடுத்தார்.  ஆனால் ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் ரிப்பன் பிரபுவின் பெயர் கட்டடத்துக்கு சூட்டப்பட்டது.  2012ம் ஆண்டு இந்த கட்டடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இதனை பொதுமக்கள் சுற்றி பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.