பொதுவாக ஆங்கிலேயர் நம் நாட்டிற்க்குள் வந்த பின்னர் நீராகாரம் குடிக்கும் பழக்கம் மறைந்து ,காபி டீ குடிக்கும் பழக்கம் வந்தது .ஆனால் இப்படி குடிப்பது நம் ஆரோக்கியத்துக்கு கேடு உண்டாக்கும் .இதனால் என்னென்னெ தீமைகள் என்று இந்த பதிவின் மூலம் அறியலாம்
1.இன்று பலரது வீடுகளில் காலை எழுந்ததும் பெட் காபி குடிக்கும் பழக்கம் உள்ளது .இப்படி வெறும் வயிற்றில் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
2.சரியான தூக்கம் இல்லாமல் அதிகாலையில் எழுந்தவுடன் ப்ளாக் காபி குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டை இழந்துவிடும் என்று இங்கிலாந்தில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
3.மேலும் வெறும் வயிற்றில் காப்பி குடிப்பது வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
4.இப்படி காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக காலையில் வெந்நீர் குடித்தால் நலம்
5.வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.