சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்திற்காக இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ப்ரோமோஷன் செய்துள்ளார். அப்போது சினிமா , தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பல்வேறு தகவலகளை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். பல இடங்களில் தனது மனைவி ஜோதிகாவுக்கும் தனக்குமான உறவை பற்றி சூர்யா பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் காக்க காக்க படத்தில் ஜோதிகா தன்னைவிட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கியதாக சூர்யா தெரிவித்துள்ளது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
"ஜோதிகாவின் தமிழில் நடித்த முதல் படத்தில் நாங்கள் இணைந்து நடித்தோம். அப்போதிருந்தே எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல நட்பு ஏற்பட்டது. ஒருத்தர் மேல் ஒருத்தர் எங்களுக்கு நிறைய மரியாதை இருந்தது. ஒரு நடிகரின் மகனாக இருந்தும் எனக்கு நன்றாக தமிழ் படிக்கத் தெரிந்தும் நான் சில நேரங்களில் என்னுடைய வசனங்களை மறந்துவிடுவேன். முன்னதாக நான்கு படங்கள் நடித்திருந்தபோதும் என்னால் ஒரு நடிகனாக என்னை நிரூபிக்க ரொம்ப சிரமப்பட்டேன். ஜோதிகா தனது வேலையின் மீது காட்டிய ஈடுபாடு எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரால் என்னை விட சீனை நன்றாக நியாபகம் வைத்துக்கொள்ள முடியும். வெற்றி அவருக்கு ரொம்ப சீக்கிரம் கிடைத்துவிட்டது. ஆனால் என்னை நான் ஒரு நடிகனாக பெருமையாக சொல்லிக்கொள்ள 5 ஆண்டுகள் தேவைப்பட்டது. காக்க காக்க படத்தில் நடித்தபோது ஜோதிகா என்னைவிட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கினார். அப்போது தான் ஒரு நடிகனாக எனக்கு என்ன இடம் என்று தெரியவந்தது. எங்கள் திருமணத்திற்கு ஜோதிகா வீட்டில் ஓக்கே சொல்லிவிட்டார்கள் ஆனால் அவரைப் பார்த்துக்கொள்ள நான் என்னை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன்" என சூர்யா தெரிவித்தார்.
Jyotika earned thrice my salary in 'Kaakha Kaakha': Suriyahttps://t.co/cseDwE2jgz
— thaiparampil (@thaiparampil) November 12, 2024
Shared via Manorama Online News App Download @ https://t.co/pl04z3bql9
மேலும் படிக்க : Nelson : பிளடி பெக்கர் ப்ளாப்....ரஜினி ஸ்டைலில் மேட்டரை டீல் செய்த நெல்சன்
Shah Rukh Khan : காசு பாக்க நினைக்காதீங்க...ராகுல் காந்திக்கு ஷாருக்கான் கொடுத்த அட்வைஸ்