Ricky Ponting : ”சிடு சிடு மூஞ்சி கம்பீர்” பாண்டிங்கின் தரமான பதிலடி
ஜேம்ஸ் November 13, 2024 06:44 PM

விராட் கோலி குறித்த தன்னுடைய கருத்துக்கு கவுதம் கம்பீர் கட்டமான பதில் கொடுத்த நிலையில் அதற்கு தற்போது ரிக்கி பாண்டிங் பதிலடி கொடுத்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்னால் செய்தியாளர்களை இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சந்தித்து பேசினார். அப்போது விராட் கோலி குறித்து பாண்டிங் கூறிய கருத்தை எப்படி பார்க்கிறீர்கள் கேள்வி கேட்டதற்கு கோபமாக பதில் கொடுத்தார். தற்போது ரிக்கி பாண்டிங்கும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்

கோலி குறித்து பாண்டிங்: 

விராட் கோலியின் ஃபார்ம் தனக்கு கவலையளிப்பதாக கூறியிருந்தார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று சதங்கள் மட்டும்  அடித்து இருந்தார். இதுவே ஒரு நாடாக இருந்து இருந்தால் அவர் அணியில் இருந்து எப்போதோ நீக்கப்பட்டிருப்பார். கோலி  ஒரு திறமையான வீரர் அவர் ஏற்கெனவே ஆஸ்திட்ரேலியாவில் சிறப்பாக ஆடியுள்ளார் என்று பாண்டிங் தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்த கம்பீர் இந்திய கிரிக்கெட் குறித்து பேச ரிக்கி பாண்டிங் யார்? அவருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், விராட் கோலி ஒரு திறமையான வீரர் அவர் நிச்சயம் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார் என்று காட்டத்துடன் பதிலளித்தார். 

பாண்டிங் பதிலடி: 

இதற்கு தற்பொது பதிலடி கொடுத்துள்ள பாண்டிங் ”இந்த விவகாரத்தில் கம்பீர் என்னைப்பற்றி விமர்சனம் செய்தது, எனக்கு எந்த வித ஆச்சரியமும் இல்லை. அவர் எப்போதும் சிடு சிடு என்றே இருப்பார். அதனால் அவர் என்னை பற்றி கூறியதில் எனக்கு எந்த வித கவலையும் இல்லை. நீங்கள் போய் விராட் கோலியிடம், அவரது ஃபார்ம் குறித்து கேளுங்கள், அவரே தனது பேட்டிங்கில் ஃபார்மில் முன்னேற்றம் வேண்டும் என்று சொல்லுவார். 

அதே போல் நான் எந்த விதத்திலும் கோலியை குறைத்து மதிப்பிட்டு பேசவில்லை. அவர் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் எப்படி ஆடியுள்ளார் என்பது  நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. கண்டிப்பாக இந்த முறையும் அதே ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி எடுப்பார். இதை தான் நான் சொன்னேன். இதை எப்படி விமர்சனம் செய்ய முடிகிறது” என்று பாண்டிங் பதிலடி கொடுத்துள்ளார். 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.