Kanguva Release : சிக்னல் கிடைச்சாச்சு..கங்குவா படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி...ஆனால் ஒரு கண்டிஷன்
ராகேஷ் தாரா November 13, 2024 08:14 PM

கங்குவா 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்பட்ம வரும்  நவம்பர் 31 ஆம் தேதி வெளியாக இருந்தது. படம் வெளியாக ஒரு சில நாட்களே இருந்த நிலையில் இப்படத்தை வெளியிடுவதில் புதிய சர்ச்சை ஏற்பட்டது.

சென்னையில் வசித்து வந்தவர் அர்ஜூன் லால். இவரிடம் கங்குவா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ரூபாய் 10 கோடி 35 லட்சம் கடன் பெற்றுள்ளது. அர்ஜூன் லால் தற்போது காலமாகிவிட்டார். இவர் திவாலானவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அர்ஜூன்லாலுக்கு ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இதுவரை ரூபாய் 20 கோடியை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் சொத்தாட்சியர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடன் தொகையான ரூபாய் 20  கோடியை வரும் 13ம் தேதி  செலுத்தாவிட்டால் கங்குவா படத்தை வௌியிடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக 6 கோடி 41 லட்சம் ரூபாய் சொத்தாட்சியர் அலுவலகத்தில் செலுத்தப்பட்டதாகவும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் 3 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்கும் அவகாசத்துடன் படத்தை வெளியிட அனுமதி கேட்டு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் கங்குவா திரைப்படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.