சிவாஜியை அணுஅணுவாக செதுக்கிய 5 இயக்குநர்கள்… யார் யாருன்னு தெரியுமா?
Tamil Minutes November 14, 2024 03:48 PM

எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் ஜாம்பவான்கள் தமிழ்சினிமா உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. எம்ஜிஆர் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் என்றெல்லாம் போற்றப்பட்டார்.

கலைத்தாயின் தவப்புதல்வன்

அதே நேரம் அவருக்குப் போட்டியாக வந்த சிவாஜி நடிகர் திலகம், கலைத்தாயின் தவப்புதல்வன் என்று போற்றப்பட்டார். அது மட்டுமல்லாமல் நடிப்புலகின் சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்து வந்தார் செவாலியே சிவாஜிகணேசன். இவரை செதுக்கிய 5 இயக்குனர்கள் யார் யார் என பார்ப்போம்.

நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் என்றாலே அதில் நமக்கு ஒரு ஈர்ப்பு வந்துவிடும். எப்பேர்ப்பட்ட கேரக்டர்கள் என்றாலும் லாவகமாகவும் எளிதிலும் நடித்து அசத்தி விடுவார். ரசிகர்களை அந்தக் கேரக்டரோடு ஒன்றிப் போகச் செய்வதில் சிவாஜிக்கு நிகர் அவர் தான்.

இப்படி ஒரு நடிப்பா..?

ஆரம்பத்தில் சிவாஜி ஒரு பெண் போன்ற தோற்றம் உடையவராக இருந்ததால் பலரும் அவரை நடிக்க வாய்ப்பு கொடுக்காமல் நிராகரித்தார்களாம். ஆனால் மேடை நாடகங்களில் அவர் நடித்த நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

அதன்பிறகு சிவாஜி பராசக்தி படத்தில் முதன்முதலாக நடித்து தமிழ்சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். கலைஞர் மு.கருணாநிதியின் வசனத்தில் இந்தப் படத்தில் சிவாஜியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. முதல் படத்திலேயே இப்படி ஒரு நடிப்பா என பலரும் வியந்தனர்.

பராசக்தி

pasamalar, parasakthi

1952ல் மு.கருணாநிதி வசனம் எழுதிய பராசக்தி படத்தை இயக்கியவர் கிருஷ்ணன் பஞ்சு. பி.ஏ.பெருமாள் முதலியார் சிவாஜியை வைத்து துணிச்சலாகத் தயாரித்து இருந்தார். படத்தில் நீண்ட கோர்ட் சீனில் சிவாஜி பேசிய நீளமான வசனம் முத்திரை பதித்தது.

அந்த வசனத்தைத் தான் இன்று வரை புதியதாக களம் இறங்கும் நடிகர்களும் நடித்துப் பழகி வருகின்றனர். அதே போல் சிவாஜி பேசிய வீரபாண்டிய கட்டபொம்மனில் வரும் வானம் பொழிகிறது… பூமி விளைகிறது என்ற டயலாக்கையும் அவர்கள் பாடமாக எடுத்துக் கொண்டு நடித்துப் பழகுகின்றனர்.

5 இயக்குனர்கள்

அந்த வகையில் சிவாஜியை செதுக்கிய 5 இயக்குனர்கள் என்றால் அதுல முதல் இடத்தில் இருப்பது பராசக்தியை இயக்கிய கிருஷ்ணன், பஞ்சு, அதற்கு அடுத்து சொல்லணும்னா அந்த நாள் படத்தை இயக்கிய வீணை எஸ்.பாலசந்தர். மூன்றாவதாக ப வரிசையிலே பல வெற்றிப்படங்களை சிவாஜிக்குத் தந்த ஏ.பீம்சிங்,

நான்காவது சிவாஜியே தன்னுடைய சுயசரிதையிலே குறிப்பிட்டுள்ள மாதிரி சிவாஜியின் உடைய வாழ்க்கையில் பல முக்கியமான திரைப்படங்களைத் தந்த ஏ.சி.திருலோகச்சந்தர், 5வது ராமன் எத்தனை ராமனடி, தங்கப்பதக்கம், வியட்நாம் வீடு போன்ற பல வெற்றிப்படங்களை சிவாஜிக்குத் தந்த பி.மாதவன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.