ஐயா அங்க மான் சமைக்கிறாங்க... உடனே கிளம்பிய அதிகாரி.. ருசித்து சாப்பிட்ட தந்தை, மகனை தட்டி தூக்கினர்
ராஜேஷ். எஸ் November 14, 2024 06:14 PM
திருப்பத்தூர்: ஆண்டியப்பனூர் காப்பு காட்டில் மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட தந்தை, மகன் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான  ஐந்து பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் காப்பு காட்டு பகுதியில் நேற்று முந்தினம் இரவு சேர்க்கானூர் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் அவருடைய மகன் முருகன் உட்பட ஐந்து பேர் மானை வேட்டையாடி சமைத்து கொண்டிருப்பதாக திருப்பத்தூர் வனச்சரகர் சோழராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
 
அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டதில் அங்கு ஏழு பேர் கொண்ட கும்பல் மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வனச்சரகர் வருவதை அறிந்ததும் அங்கிருந்த ஐந்து பேர் தப்பி ஓடினர். மேலும் ராமமூர்த்தி மற்றும் அவருடைய மகன் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து திருப்பத்தூர் வனச்சரக அலுவலகம் கொண்டு வந்தனர். 
 
இந்த நிலையில், மான்கறி சமைத்து சாப்பிட்ட தந்தை, மகன் இருவரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஆண்டியப்பனூர் காப்பு காட்டில் மான் கறி சமைத்து சாப்பிட்ட தந்தை மகன் இருவரும் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.