நகரத்திற்கு ஒரு கடையாக இருந்தது போய் பின் ஒவ்வொரு நகருக்குள்ளும் நான்கைந்து கடைகள் என்று மெல்ல உருவானது. இன்றைக்கு தெருவுக்கு இரண்டு மூன்று கடைகள் என்று பாஸ்ட் புட் கடைகளைப் போலவே சலூன் கடைகளும், அழகு நிலையங்களும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான சலூன் கடைகளிலும், அழகு நிலையங்களிலும் மொழி தெரியாத வடமாநில இளைஞர்களும், யுவதிகளும் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
இதில் அவர்களுக்கு மசாஜ் செய்வது குறித்த அனுபவமோ, திறமையோ இருப்பதை யாரும் உறுதி செய்வதுமில்லை. ஆயில் மசாஜ் என்பதை ஏதோ உச்சந்தலையில் எண்ணெய்யை ஊற்றி, நான்கைந்து குத்துக்கள் விடுவதும், முதுகில் சரமாரியாக குத்துவதும், கழுத்தை இந்த பக்கம் ஒரு திருப்பு, அந்த பக்கம் ஒரு திருப்பு என்று திருப்புவதும் தான் என்பதாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இப்படி போதிய அனுபவமில்லாத பியூட்டி பார்லருக்கும், சலூன் கடை மசாஜ் சென்டர்களுக்கும் போய் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். சமயங்களில் இவை உயிருக்கே உலை வைக்கலாம். நிரந்தரமாக இழப்பை ஏற்படுத்தலாம் என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது. ட்வீட்டரில் இது குறித்து ஒரு பயனரால் பதிவேற்றப்பட்ட வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளுடன் விரைவாக வைரலாகி வருகிறது. பலருக்கும் சலூன் கடைகளில் ஆயில் மசாஜ் செய்துக் கொள்ளும் போது இது போன்ற அனுபவம் இருந்திருக்கும். இது இது குறித்து உஷாராக இருங்க.
இதுபோன்ற மசாஜ்களின் அபாயகரமான தன்மை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருவதால், மக்களின் எதிர்வினைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு பயனர்,"நீங்கள் முறையான தொழில் வல்லுநர்களிடம் செல்லவில்லை என்றால், இது தான் நடக்கும்" என்று கருத்து தெரிவித்தார். மற்றவர்கள், பயிற்சி பெறாத நபர்களுடன் இது போன்ற மசாஜ்களை முயற்சிப்பதை தவிர்த்திடுங்க” என்று பயனர்களை எச்சரித்துள்ளார்.
சில செயல்களை எப்போது அல்லது எப்படி பாதுகாப்பாகச் செய்வது என்பது அவர்களுக்குத் தெரியாது என்று பலரும் வலியுறுத்துகின்றனர். ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்காக, இது போன்ற சேவைகளுக்கு எப்போதும் நிபுணர்களைத் தேடுவதற்கான நினைவூட்டலாக இந்த வீடியோ செயல்பட்டு அதன் நோக்கத்திற்காக வைரலாகி வருகிறது.